districts

img

தோழர் ஆர்.ரவீந்திரன் உடலுக்கு கட்சியினர்- தலைவர்கள் அஞ்சலி

 மயிலாடுதுறை, பிப்.21-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு உறுப்பினரும், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவருமான தோழர் ஆர்.ரவீந்திரன் பிப்ரவரி 20 அன்று காலமானார். அவது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், சிஐடியு மாநிலப் பொதுசெயலாளர் ஜி.சுகுமாறன், விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் சாமி.நடராஜன்,சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், சிபிஎம் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்  சின்னை பாண்டியன் ,  தஞ்சாவூர் சிஐடியூ மாவட்ட தலைவர் கருப்பையா மற்றும் வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.