பாபநாசம், டிச.30 - ஒமியட் எனும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்தார். சிறுபான்மை பள்ளிக் கூடங்கள், சிறுபான்மை மொழித் தேர்வுகள், சிறுபான்மை சான்றிதழ் வழங்குவது, சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன. இதில் ஒமியட் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் கமால் அப்துல் நாசர், பொருளாளர் முஹமது கத்தீப், நையீம், இக்பால் ஷா மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் உடனிருந்தனர்.