districts

கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் மூலம் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம், ஜூன் 4-

    கோடை விடுமுறை நிறைவு பெற உள்ள  நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் தெரிவித் துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 400  சிறப்பு பஸ்கள் தமிழகத்தில் கோடை விடு முறை முடிந்து வருகிற 7-ஆம் தேதி (புதன் கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு கோடை விடுமுறையில் வெளியூர் சென்றிருந்தவர்கள் ஊருக்கு  திருப்ப வசதியாக இன்று (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக் குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்து கள் இயக்கப்படுகிறது.

   இதேபோல் சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், தஞ்சா வூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திரு வாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக் குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு  250 சிறப்பு பஸ்களும், திருச்சிராப்பள்ளியி லிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய  ஊர்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர்,  மதுரை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி ராப்பள்ளிக்கும், திருச்சிராப்பள்ளியிலிருந்து இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சா வூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 150 சிறப்புப் பேருந்து கள் என மொத்தம் 400 சிறப்புப் பேருந்துகள்  இயக்கப்படுகிறது.

;