புதுக்கோட்டை, நவ.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தை அடுத்து, விராலி மலை தாலுகாவில் உள்ள பொத்தப் பட்டி கிராமத்தில் புதன்கிழமை பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை தாலுகா பொய்யாமணி ஊராட் சிக்கு உட்பட்டது பொத்தப்பட்டி, வெள் ளக்கால்பட்டி கிராமங்கள். இக்கிராமங் களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமானால், சுமார் 4 கி.மீட்டர் தூரம் சென்று பொய்யாமணியில்தான் வாங்க வேண்டும். எனவே பொத்தப்பட்டி, வெள்ளக் கால்பட்டி கிராமங்களை உள்ளடக்கி பொத்தப்பட்டியில் பகுதிநேர அங்காடி திறக்க வேண்டுமென கடந்த பல வரு டங்களாக அம்மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவர் களின் கோரிக்கைகளுக்காக மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சி யான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து பொத்தப் பட்டி கிராமத்தில் புதன்கிழமை பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டது. தொடக்க நிகழ்வுக்கு கட்சியின் கிளைச் செயலா ளர் அ.மீனா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட் களை வழங்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பா ராமலிங்கம், ஒன்றியக் கவுன் சிலர் சத்யா ஏழுமலை, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர்.