districts

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி, ஆக.21 -

      திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வடபாதி பிச்சன்  கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (55). இவர் திங்களன்று காலை  சுமார் 7 மணியளவில் மின் மோட்டாரைப் போடுவதற்காக சுவிட்சை தொட்ட  போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த தங்கராசு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.