கரூர், மே 8 - இறந்தவரின் உடலை சுடுகாட் டிற்கு கொண்டு செல்ல சாலை, மின் விளக்குகள், தண்ணீர் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சிக் குட்பட்ட வடக்கு மேட்டுப்பட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளன. இவர்கள் பெரும் பாலும் விவசாயம், விவசாயக் கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். மேலும், கரூர் நகருக்கு டெக்ஸ் வேலைக்கும், கட்டுமான வேலை களுக்கும் செல்கின்றனர். நான்கு தலைமுறையாக வாழ்ந்து வரும் வடக்கு மேட்டுப் பட்டி மக்களுக்கு இந்த நூற்றாண்டி லும் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லை. இறந்தவரின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து தூக்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந் திரன் கூறுகையில், “வடக்கு மேட்டுப் பட்டியில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிப்பதற்கும், புதைப்பதற்கும் பாதை இல்லை. நான் சிறுவனாக இருக்கும் போது இறந்தவரின் உடலை தோளில் சுமந்து தூக்கிச் சென்றனர். இன்றுவரை அதே நிலைமைதான் உள்ளது. சுடுகாட்டிற்கு செல்லும் பகுதி முழுவதும் முட்புதர்கள் அதிகமாக இருக்கின்றன. அவ்வழி முழுவதும் பாறைகள், கற்கள் நிறைந் திருப்பதால் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்ல முடியாமல் தடு மாறி கீழே விழுகின்றனர். மழைக்காலத்தில்... மேலும் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஆற்றுப்பகுதி இருக் கிறது. மழைக் காலங்களில் மழை நீர் செல்லும். அப்போது இறந்தவ ரின் உடலை தண்ணீரை தாண்டித் தான் தூக்கிச் சென்றாக வேண்டும். இதைவிட வேதனையானது, இரவு நேரத்தில், இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் போது, தீப்பந்தம் ஏந்தி அந்த வெளிச்சத்தில் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை யில் இருக்கிறோம். ஒருவர் இறந்துவிட்டால், அவ ரது குடும்பத்தினர் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதர் களை வெட்டி தனது சொந்த செல வில் தற்காலிக பாதையை அமைக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத் திற்கு இதனால் அதிகளவில் செலவு ஆவதுடன், கடுமையான மன உளைச்சலையும் சந்திக்கின் றனர். இது போன்ற பல கஷ்டங்களை ஒவ்வொரு முறையும் நாங்கள் அனு பவித்து வருகிறோம். தற்போது இறந்தவரின் உடலை சுமந்து செல்வதற்கு வாகனங் கள் வந்து விட்டது. ஆனால் நாங்கள் இன்றும் தோளில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நி லையை போக்கிட வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை மனு வழங்கியும், வெள்ளியணை ஊராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். சிபிஎம் கண்டனம் சுடுகாட்டிற்கு செல்வதற்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்து, மின் விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். சுடுகாட்டில் போர் அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். சுடு காட்டில் எரிமேடை அமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறை வேற்றித் தர கரூர் மாவட்ட நிர்வாக மும், வெள்ளியணை ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் வடக்கு மேட்டுப்பட்டி கிளை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.