districts

img

நிவேதா பள்ளி ஆண்டு விழா அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

மயிலாடுதுறை, ஜன.29-  மயிலாடுதுறை மாவட்  டம் தரங்கம்பாடி அருகே யுள்ள பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யின் 20ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற் றத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில மற்றும் மாவட்ட அள விலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங் களை வழங்கினார்.  விழாவில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினரும், மயி லாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்தி ரன், ஆசிரியர்கள், மாணவ  மாணவிகளின் பெற்றோர் கள் கலந்து கொண்டனர். முன்னதாக விஜய் டீவி புகழ் தீனா, வினோத், ராஜவேலு ஆகியோரின் பல்சுவை நிகழ்ச்சியும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.