நாகப்பட்டினம், செப்.29 - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற வட்டார சுகாதார பேரவை நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் நடை பெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி வாழ்த்திப் பேசினார். கொள்ளை நோய் தடுப்பு முறை மாவட்ட அலு வலர் மரு.லியாகத் அலி, நோய் தடுப்பு முறை மற்றும் தற்காப்பு குறித்து பேசினார். திருக்கு வளை ஊராட்சி மன்றத் தலைவர் எல்.பழனி யப்பன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன், திருப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சத்திய ராஜ், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கௌசல்யா இளம்பருதி உள்ளிட் டோர் உள்ளாட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பணிகள் குறித்து பேசி னர். வட்டார மருத்துவ அலுவலர் மரு.பத்ம பிரியா, கீழையூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். வட்டார சுகாதார மேற்பார்வையா ளர் சுப்பிரமணியன், வேளாங்கண்ணி பேரூ ராட்சித் தலைவர் டயானா உள்ளிடோர் கலந்து கொண்டனர்.