திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் தஞ்சை தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இதில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன், நகரச் செயலாளர் வீரா கணேசன், சிபிஐ சார்பில் மகேந்திரன், காங்கிரஸ் கனகவேல், திராவிட கழக மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுபிரகாஷ், நகர ஒன்றியச் செயலாளர் தாயுமானவன், கே.ஜெயபால், விசிக சார்பில் நகரச் செயலாளர் ஏ.அறிவுக்கொடி, மதிமுக சண்.சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.