districts

img

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கட்டடப் பணிகள் துவக்கம்

தஞ்சாவூர், நவ.3 - பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு விரைவில் புதிய கட்டடப் பணிகள் துவங்க உள்ள நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை பொறி யாளர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணியில் பெருந்தலைவர் காம ராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பேரா வூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக் கான பொதுமக்கள் தினசரி உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனைக்கு கட்டடம் கட்டப்பட்டு 50 வருடங் களை கடந்த நிலையில், புதிய கட்டிடம் கட்ட வேண்டும். நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துப் பேசினார்.  இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.5.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.  இதையடுத்து, நோயாளி களின் மருத்துவ சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தெரிவித்தார். இந்நிலையில், வியாழக் கிழமை காலை பொதுப்பணித் துறை (அரசு மருத்துவமனை கட்டடங்கள் கட்டுமான பிரிவு)  செயற்பொறியாளர்  பி.நாகவேல், உதவி செயற் பொறியாளர் கேசவன் ஆகி யோர், பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் முன்னிலையில் கட்டிடம் அமைய உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது தரைத்தளம், முதல் மாடி, இரண்டாம் மாடி என நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டப்படும் என வரைபடங்களை காட்டி, சட்டப்பேரவை உறுப்பின ரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.  இந்த ஆய்வின்போது, அரசு தலைமை மருத்துவர் காமேஸ்வரி, மருத்துவர்கள் பாலகுமார், ரம்யா, செவிலியர்கள், கல்வி புரவலர் அப்துல் மஜீத் மற்றும் பலர் உடனிருந்தனர்.