districts

img

‘மனம் தூதுவர்’களுக்கு மனநல மேம்பாட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை, செப்.20 - மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை யின் சார்பில் மனம் திட்டத்தின்கீழ், மனம் தூது வர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் புதன் கிழமை நடைபெற்றது. பயிற்சியைத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு ‘மனம் தூதுவர்’ பதக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில், “புதுக்கோட்டை  மாவட்டத்தில் மாணவர்களின் மன உறுதி காக்கும் ‘மனம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட மனநல நல்லாதரவு மன்றங்கள் ‘Student Healthy Mind Forum” அனைத்து கல்லூரிகளி லும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்ற உறுப்பி னர்களின் மூலம், கல்லூரி மாணவர்களி டையே மனநல மேம்பாடு பற்றிய தொடர் விழிப் புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மனநலம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், அவர்களுக்குத் தேவையான மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கிடவும் மனம் திட்டத்தின் சார்பில் ஒவ்வொரு கல்லூரி யிலிருந்தும் 50 நபர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்ச னைகளை கையாள்வது குறித்தும், அவற்றி லிருந்து வெளிப்பட ஆலோசனைகள் வழங்கு வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.  இவ்வாறு பயிற்சி பெற்ற மாணவர்கள் ‘மனம் தூதுவர்கள்’ என்ற பெயரில் அழைக்கப் படுவர். இந்த மனம் தூதுவர்கள், தங்களது கல்லூரிகளில் மனநல மேம்பாடு மற்றும் மனநல திட்ட சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒரு ‘தொடர் இயக்கமாக” நடைமுறைப்படுத்துவர்” என்றார்.