districts

தேர்வு எழுத விடாமல் செய்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவர்

திருவாரூர், மே 4 - திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கி.ராஜாராம். இவர்,  கல்லூரி நிர்வாக செயல்பாடு காரண மாக எம்பிஏ இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுத முடியாததால் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலை யில், கடந்த ஏப்.24 அன்று கல்லூரியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை  அளித்ததால், தற்போது மாணவர் ராஜா ராம் நலமாக உள்ளார்.  இதுகுறித்து மாணவர் கி.ராஜாராம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் அருகே உள்ள சேந்த மங்கலத்தில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இரண் டாம் ஆண்டு எம்பிஏ படித்து வரு கிறேன். நான் முதலாம் ஆண்டு கல்லூரி யில் சேரும் போது அந்த கல்லூரி ஆசிரி யர்கள் ஆறு மாத பருவ கட்டணம் ரூ.16, 000/-, ஒரு ஆண்டுக்கு ரூ.32,000/- என கூறியிருந்தனர். இதனை உங்களுக்கு கல்வி உதவித் தொகையாக அரசே  கொடுத்து விடும். இதனால் உங்களுக்கு  கல்வி இலவசம் என்று கூறியிருந்தனர்.  உதவித் தொகை முழுவதையும் மிரட்டி வாங்குகின்றனர் ஆனால் நடந்தது என்னவோ, அரசாங்கத்தையும் மாணவர்களையும் ஏமாற்றும் விதமாக உள்ளது. எம்பிஏ படிக்கும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.46,000/-ஐ கல்வி உதவித் தொகையாக அரசு வழங்குகிறது.  அரசின் உதவித்தொகை (ஸ்கா லர்ஷிப்) வங்கிக் கணக்கில் ஏறியவுடன்  ஆசிரியர்கள் எஸ்.சி., எஸ்.டி. மாணவர் களிடம், “அந்த தொகை முழுவதையும் கல்லூரியில் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்களை தேர்வு எழுத விடமாட்டோம்” என மிரட்டி அர சின் உதவித்தொகையை கல்லூரி நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. மேலும் கல்லூரியில் பிசி, எம்.பி.சி,  ஓபிசி மாணவர்களிடம் சேர்க்கையின் போது கூறிய கல்வி கட்டணம் தொகை  ரூ.32,000-ஐ மட்டுமே பெற்றுக் கொள் கின்றனர். இது போன்ற திட்டத்தில்,  ஏற்றத் தாழ்வுகளுடன், மாணவர்களி டையே சாதியப் பாகுபாடு பார்க்கும் வித மாக நிர்வாகம் செயல்படுகிறது.  பல்கலை. பட்டியலில்  பெயர் நீக்கம் இந்த பாகுபாடுகள் குறித்து கேள்வி  கேட்டதால், கல்லூரி நிர்வாகம் மூன்றாம் கட்ட தேர்விற்கான தேர்வு கட்ட ணத்தை வாங்க மறுத்தும், பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெயர் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கியும் விட்டனர். ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் படிக்கத் தொடங்கிய நான், தனியார்  கல்லூரி நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டதால், அக் கல்லூரி நிர்வாகம் எனது இரண்டு ஆண்டு கால உழைப்பினை சீர்கு லைத்து, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மரணத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த தனியார் கல்லூரி, நூறு சத வீத தேர்ச்சி என்ற பொய்யான விளம்ப ரங்களை வெளியிட்டும், இலவசக் கல்வி என்ற பெயரில் மாணவர்களை சேர்த்து, அரசின் கல்வி உதவித் தொகையை நூதனமாக பெற்றுக் கொண்டு மாணவர்களை மன உளைச்ச லுக்கு ஆளாக்குகிறது. எனவே இக்கல் லூரியை ஆய்வு செய்து, கல்லூரி நிர்வா கத்தின் மீது தமிழ்நாடு அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த இந்திய  மாணவர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பா.ஆனந்த், பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர் ராஜாராம் தமிழ்நாடு முதல மைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதி திராவிட சமூக நலத்துறை அலுவல கத்திற்கு மனு அளித்தும் இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாணவருக்கு உரிய நீதி கிடைக்க வில்லை என்றால் பாதிக்கப்பட்ட மாண வர் ராஜாராமுக்கு நீதி கிடைக்கும் வகை யில், இந்திய மாணவர் சங்கம் சார்பாக கல்லூரி வாயில் முன்பு போராட் டம் நடைபெறும் என பா.ஆனந்த் தெரி வித்துள்ளார்.

;