districts

img

மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்.1 - திமுக தலைமையிலான இந்தியா  கூட்டணியின் சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடு கிறார் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறி ஞர் ஆர்.சுதா. இவரை ஆதரித்து அறி முகப்படுத்தும் செயல்வீரர்கள் கூட்டம்  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் கீழமுக்கூட்டு பிகேசி மஹா லில் நடைபெற்றது.  திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச் சர்கள் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி., செ.இராமலிங்கம், காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜ குமார், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குத்தாலம் பி.கல்யா ணம், பூம்புகார் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் என்.இளைய ராஜா உள்ளிட்ட பலர் சிறப்புரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றினர். மேலும், இந்தியா கூட்டணியில் அங்கம்  வகிக்கும் கட்சிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். ஆதரவளித்து பேசிய தலைவர் களுக்கு நன்றி தெரிவித்தும், வாக்குக்  கேட்டும் மயிலாடுதுறை தொகுதி காங்கி ரஸ் வேட்பாளர் ஆர்.சுதா உரையாற்றி னார். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களி டம் அமைச்சர் மெய்யநாதன் ஆதரவு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேக ரித்தார்.