districts

img

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா முதல் விற்பனையை ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை, அக்.11 - மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஏ.வி.சி. திருமண மண்டபத்தில் மயிலாடு துறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பா ளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திரு விழாவை திங்களன்று உற்சாகமாக தொ டங்கியது. விழாவை திங்களன்று மாலை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை வகித்து, முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத் தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜ குமார் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), எம்.பன்னீர்செல்வம் (சீர் காழி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் இப்புத்தக திருவிழா வில், பாரதி புத்தகாலயம், நியூ சென்சுரி புக்ஹவுஸ், கிழக்கு பதிப்பகம், நக்கீரன், விகடன் உள்ளிட்ட பதிப்பகங்கள் பங் கேற்று 60-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்துள்ளன. இதில் வரலாறு, இலக்கியம், புதி னங்கள், கவிதை, தலைவர்களின் வரலாறு கள், தொல்லியல், அறிவியல், ஆய்வு புத்த கங்கள், கலைக்களஞ்சியங்கள், அறிவியல்  களஞ்சியங்கள், போட்டித் தேர்வு சம்பந்தப் பட்ட நூல்கள், சமயம் சார்ந்த மற்றும்  ஆன்மீக புத்தகங்கள், சிறுவர் சிறுமியர்களுக் கான புத்தகங்கள், சுய முன்னேற்ற நூல்கள்  மற்றும் பல்வேறு துறைசார்ந்த - அறிவு சார்ந்த புத்தகங்களும் சலுகை விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விழாவில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரிமீயம் பெறு வதற்கான அரங்கம், மயிலாடுதுறை மாவட்ட  காவல்துறை சார்பில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான செல்ஃபி பாயிண்ட்,  மாவட்ட வேளாண் துறை சார்பில் பாரம்பரிய  நெல் ரகங்களுக்கான கண்காட்சி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கற்றல், கற்பித்தல் விளக்க அரங்குகள் என பல்வேறு சிறப்பு அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.

;