districts

img

குடவாசல் பேரூராட்சியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு மாதர், வாலிபர் சங்கம் வாக்குச் சேகரிப்பு

குடவாசல், பிப்.14 -  திருவாரூர் மாவட்டம் குட வாசல் பேரூராட்சி மன்ற உறுப்பினர்  பொறுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக 2 ஆவது வார்டு  மற்றும் 15 ஆவது வார்டில் போட்டியி டும் வேட்பாளர்களுக்கு மாதர் சங்கம் - வாலிபர் சங்கத்தினர் அரிவாள்,  சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர். சிபிஎம் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளரு மான பி.கோமதி தலைமையில், தலைவர் ஆர்.சுமதி முன்னிலையில் குடவாசல் பேரூராட்சி 2 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.லெட்சுமி-க்கும், 15  ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.அமுதா ஆகியோ ருக்கு வீடு வீடாக சென்று  வாக்குச்  சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மாதர் சங்க குடவாசல் ஒன்றியச் செயலாளர் கே.ஜெகதீஸ்வரி, வாலி பர் சங்க ஒன்றிய செயலாளர் கே. பகத்சிங், தலைவர் பி.குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.