districts

img

மனிதகுலத்தின் மீது காதல் கொண்டவர் மார்க்ஸ்

எஸ்.கண்ணன் பேச்சு

கோவை, மே 7-

    மனிதன் சுரண்டலில் இருந்து விடுபட வேண்டும் என்று, மனித குலத்தின் மீது காதல் கொண்ட காரல் மார்க்சின் குறிப்புகளே மூல தனம் என்று, கோவையில் நடை பெற்ற O2 நூல் வெளியீட்டு விழா வில் எஸ்.கண்ணன் உரையாற்றி னார்.

   சிஐடியு கோவை மாவட்டக் குழு மாமேதை காரல் மார்க்ஸ் 205 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற் றும் கொரோனா காலத்தில் தொழிற் சங்கங்கள் செயல்பட்ட விபரங்கள், போராட்ட வரலாறுகள் அடங்கிய “O2” நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. கோவை மலையாள சமா ஜம் அரங்கில் நடைபெற்ற விழா விற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைச்செய லாளர் எம்.கே.முத்துக்குமார் வர வேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் “O2” நூலை வெளியிட, தொழிற் சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் யு.கே.வெள்ளிங்கிரி பெற்றுக்கொண் டார். தமுஎகச மாவட்ட செயலாளர் அ.கரீம், நூல் குறித்து அறிமுக உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாநி லத் துணைத்தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.

   அப்போது கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கோவை தொழிற் சங்க இயக்கம் கொரோனா காலகட் டத்தில் எப்படிப்பட்ட சேவைப் பணி களை மேற்கொண்டது என்பது எளி தில் சொல்லக்கூடிய விஷயம் அல்ல. அப்போதைய சூழலில் தொழிற் சங்கத்தை நாடிய எத்தனையோ பேருக்கு, வேறுபாடின்றி உணவு உள்ளிட்ட பணிகளை தொழிற்சங்க இயக்கம் செய்ததை வரலாற்றில் நாம் குறித்து வைக்க வேண்டும். அந்த வரலாறாக உருவாகியுள்ள நூல்தான் “O2”. பல தொழிலாளர் களை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ள இந்த நூலை அனை வரும் படிக்க வேண்டும், என்றார்.

   சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் நிறைவு ரையாற்றுகையில், மே 1 கொண்டா டப்பட வேண்டிய நாளா? அல்லது தியாக தினமா? அல்லது தியாகம் செய்த தொழிலாளி வர்க்கத்திற் கான வீரவணக்க நாளா? என்ற ஒரு  விவாதம் இன்று வரை பல மையங் களில் எழுந்து வருகிறது. ஆனால், தொழிலாளி வர்க்கம் தன்னுடைய கோரிக்கைகளுக்காக அளப்பறிய தியாகங்களை செய்து, பல உரிமை களை பெற்றது என்பது வரலாறு. இந்த வரலாற்று நாளாகவே 1887 ஆம் ஆண்டு முதல் மே தின நாள் கொண்டாடப்படுகிறது. 205 ஆம்  ஆண்டு மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு நாள் கொண்டாடப்படு வது, இரு நூற்றாண்டுகளைக் கடந்து மனிதன் தன்னுடைய வாழ் நாளில் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு களை அறிவியல் ரீதியாக கண்டு பிடித்துள்ளனர். இருந்தாலும், மனி தன் ஒருவன் சுரண்டலில் இருந்து  விடுபட வேண்டும் என்கிற மனித  குலத்தின் மீதான காதல் கொண்ட  அவருடைய மூலதன குறிப்புகளே மனித குலத்திற்கு அடிமை சங்கி லியை உடைத்து, விடுதலையை நோக்கிய பயணத்தை புரட்சிகர பாதையில் பயணிக்கச் செய்தது.

   ஆகச்சிறந்த தலைவர்களில் போற்றப்பட வேண்டிய மகத்தான தலைவர் காரல் மார்க்ஸ். கோவை யில் பல்வேறு உற்பத்திக் கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தொழிலாளி வர்க்கத்திற்கான வளர்ச்சி பாதை யில் கோவை மண்டலம் மிகப் பெரிய பங்களிப்பாற்றியுள்ளது, என் றார். முடிவில் நூலின் ஆசிரியரும், சிஐடியு மாவட்ட பொருளாளரு மான வேலுச்சாமி ஏற்புரையாற்றி, நன்றி கூறினார்.