districts

img

மன்னார்குடி உழவர் சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு விவசாயிகள், சிஐடியு ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜன.10- தமிழக முன்னாள் முதல்  வர் கலைஞரின் கனவு திட்ட மான உழவர் சந்தைகளில், மாநிலத்தின் முதல் 5 சந்தை களில் ஒன்றாகவும், டெல்டா  மாவட்டங்களுக்கு முதன்மை  சந்தையாகவும் செயல்பட்டு வருகிறது மன்னார்குடி உழ வர் சந்தை. இச்சந்தையை பேருந்து  நிலைய கட்டுமானத்தை கார ணம் காட்டி இடம் மாற்றம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யப்பட்டால், அது டெல்டா மாவட்டங்களின் வேளாண் முன்னுரிமைக்கு எதிராக அமையும். மேலும் மன்னார்குடி உழவர் சந்தை அதன் சிறப்புத் தன்மையை இழந்துவிடும். எனவே உழ வர் சந்தையை இடமாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற் சங்க மையம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க நகரச் செயலாளர் ஜி. முத்துகிருஷ்ணன் தலைமை  வகித்தார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் ஜி. ரகுபதி முன்னிலை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டீ.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா, உழவர் சந்தை  விவசாயி கே.வேதரத்தினம், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றிய செயலாளர் கே.ஜெயபால் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி சிறப்புரையாற்றினார். விவ சாயிகள் சங்க நகரத் தலை வர் எஸ்.ஏகாம்பரம் நன்றி கூறினார்.

;