districts

img

டார்வின் பயிற்சி மைய துவக்க விழா

பொன்னமராவதி, ஜன.9 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான டார்வின் இலவச பயிற்சி மைய தொடக்க விழா, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமை வகித்தார். பயிற்சி மையத்தை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்து உரையாற்றினார்.  வட்டாரக் கல்வி அலுவலர்கள் சே.ராமதிலகம், இலாஹிஜான், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் புவியரசு, தலைமையாசிரியர் எஸ்.மல்லீஸ்வரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக அறிவியல் இயக்க வட்டாரச் செயலர் ராசு வரவேற்றார். வட்டார பொருளர் கண்ணன் நன்றி கூறினார். டார்வின் இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற 98438 91843, 89733 32221, 94434 42645 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.