புதுக்கோட்டை, மார்ச் 8 - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றி யம் மலையடிப்பட்டி கிராமத்திற்கு அரசு நகரப் பேருந்து வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், அரசுப் போக்குவரத்துக் கழக கந்தர்வ கோட்டை பணிமனை மேலாளர் தாமோதரன், குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டிச்செல்வி போஸ், திமுக ஒன்றியச் செயலாளர் சண்முகம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மதிமுக ஒன்றியச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.