புதுக்கோட்டை, ஆக.25-
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை வழங்கினார்.
கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கீரனூர் அரசு ஆண் கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கள், ஒடுகம்பட்டி, சத்தியமங்கலம், புலியூர், அண்டக்குளம், நார்த்தாமலை, கிள்ளுக் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகள், கீர னூர் புனித ஆரோக்கிய அன்னை மேல் நிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழக் கிழமை நடைபெற்றது.
விழாவில் கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.