புதுக்கோட்டை, டிச.13- புதுக்கோட்டை மாவட் டம் குண்றாண்டார்கோவில் ஒன்றியம் தெம்மாவூரில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப் பீட்டில் தெம்மாவூர் ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை எம்.சின்னதுரை எம்எல்ஏ மக்களின் பயன்பாட் டிற்காக திங்கள்கிழமை திறந்து வைத்தார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்க வேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மற்றும் அதிகாரிகள், பய னாளிகள் பங்கேற்றனர். கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிக ளில் மூன்று புதிய மின்மாற்றி களை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத் தில் கந்தர்வகோட்டை ஊராட்சியில் அரண்மனைத் தெரு, கல்லாக்கோட்டை ஊராட்சியில் புதுவயல் மற்றும் கல்லாக்கோட்டை ஆகிய பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை விவசாயி கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கந்தர்வ கோட்டை உதவி மின் செயற் பொறியாளர் ராஜ்குமார், திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா கமிட்டி தலை வர் ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சித்தி ரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.