புதுக்கோட்டை, பிப்.29- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளவிடுதியில் 400 வோல்ட் துணைமின் நிலையத்தை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமையன்று திறந்து வைத்தார். இதுகுறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளவிடுதியில் 909.19 கோடி ரூபாய் மதிப்பிலான 400 கிலோ வோல்;ட் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்துணை மின்நிலையத்திலிருந்து நெம்மேலி திப்பியகுடி, புதுக்கோட்டை, துவாக் குடி, மொண்டிப்பட்டி ஆகிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலை யங்களும், கந்தர்வகோட்டை, கறம்பக் குடி, கீரமங்கலம், சேதுபாவாசத்திரம், நாகுடி, மழையூர் மற்றும் வடகாடு ஆகிய 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும் இணைக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவ கங்கை மாவட்டங்களில் 50 லட்சத்திற் கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, பெருந் தொழிற்சாலைகளுக்கும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்களுக்கும் குறைந்த மின்ன ழுத்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப் பட்டு சீரான மின்விநியோகம் செய்யப் படும். இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடர்ந்து வெள் ளாளவிடுதி துணை மின்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், தலைமைப் பொறி யாளர் (மின்சார வாரியம்) சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.