districts

img

தோழர் கே.காமராஜ் படத்திறப்பு: எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு

தஞ்சாவூர், செப்.11-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன் னாள் மாவட்டத் தலைவருமான மறைந்த தோழர் கரியப்பட்டி கே.காமராஜ் படத்திறப்பு  ஞாயிறன்று மாலை அவரது இல்லத்தில் நடை பெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை தோழர் காமராஜ் உருவப் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.  சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என்.வி. கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, பி.செந்தில் குமார், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கோ.வி.க.சுப்பு உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். வெண்டையம்பட்டி சைமன் படத்திறப்பு நிகழ்வில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தோழர் சைமன்  உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.