districts

திருச்சி முக்கிய செய்திகள்

இலக்கிய மன்ற போட்டிகள்

அறந்தாங்கி, நவ.29 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி மற்றும் வினாடி-வினா ஆகிய இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டியை மணமேல் குடி வட்டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத்தார். நடுவர்க ளாக ஆசிரியர்கள் ஜோக்கின் ராய், இளங்கோ வடிவேல், செந்தில்பாண்டி, பிரதாப் சிங், ஜெயானந்த், இளங்கோவன், ரேகா மற்றும் மணிமுத்து ஆகி யோர் செயல்பட்டனர். இதில்,  12 பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் கலந்து கொண்டனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

பாபநாசம், நவ.29 - பாபநாசம் வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக் கான திறன் மேம்பாட்டு பயிற்சி  நடந்தது.  பயிற்சியில் பாப நாசம் ஒன்றியத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் கற்றல் விளைவுகளை செயல்பாடு அடிப்படையில் தெரிந்து கொள்ளவும், புதிய கற்றல் விளைவுகளை சொந்தமாக உருவாக்குவதற்கான பயிற்சி யும் நடந்தது. ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்ட னர். பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முரு கன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இப்பயிற்சி 3 நாட்கள் நடை பெற்றன.

போக்சோவில்  ஒருவர் கைது

அரியலூர், நவ.29- அரியலூர் மாவட்டம் பாப் பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த வர் பாலகுமார் (36). கொத்தனா ரான இவருக்கு திருமணமாகி  2 பெண் குழந்தைகள் உள்ள னர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட  வேலைக்கு சென்ற போது, 16  வயது சிறுமியிடம் காதலிப்ப தாகவும், திருமணம் செய்து  கொள்வதாகவும் ஆசை  வார்த்தை கூறி, காட்டு மன்னார்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச்  சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பாலகுமாரிடம் கேட்ட போது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த பாலகுமாரை கைது செய்தனர்.

கடல் சீற்றத்தால் பழையாறு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

மயிலாடுதுறை, நவ.29 - மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு மீன்பிடி துறை முகத்திலிருந்து நாள்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 200  நாட்டு படகுகள் மூலம் மீன் பிடித்தொழி லுக்கு மீனவர்கள் கடலுக்கு சென்று வரு கின்றனர்.  கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக இருப்பதால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரு நாட்களாக   கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் பழையாறு துறை முக வளாகத்தில் மீன் வலை பின்னுதல், மீன்களை பதப்படுத்துதல், விற்பனைக்கு அனுப்பி வைத்தல், கருவாடு உலர வைத் தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 2 ஆயிரம் தொழிலாளர்களும்  வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.  மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் பழையாறு படகு அணையும் தளத்திலும், துறை முகத்தை ஒட்டி அமைந்துள்ள பக்கிங்காம்  கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளன.  இந்நிலையில் கடல் தொடர்ந்து சீற்ற மாக இருப்பதால், மீன்வளத் துறை அறி வுறுத்தலின் பேரில் 2 ஆம் நாளான புதன்கிழ மையும் பழையாறு மீனவர்கள் 6 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் மீன் பிடிக்க செல்லவில்லை.

வாடகை வீட்டில் குடியிருப்போர் அமைப்பு உறையூரில் துவக்கம்

திருச்சிராப்பள்ளி, நவ.29 - திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஸ்லிம்தெரு, காவேரிநகர், மாரியம்மன் கோவில், பாண்டமங்களம், புத்தூர், வண்ணாரப்பேட்டை தென்னூர் பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வரும் சொந்த வீடில்லாத 392 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிச் செயலாளர் ரபீக்அஹமது தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக தில்லைநகர் காந்திபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் அமைப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக உறையூர் பகுதியிலுள்ள காவிரி நகரில் வாடகை வீட்டில் குடியிருப்போர் அமைப்பு செவ்வாயன்று தொடங்கப்பட்டது. கூட்டத்திற்கு சிபிஎம் மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகம் மூலம் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு பெறுவதற்கு நடைபெற்று வரும் வேலைகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கிளை செயலாளர் சுப்ரமணி ஆகியோர் பேசினர்.  மேலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்து கிடைக்க பெறாதவர்களுக்கு மேல்முறையீடு செய்வது. முதியோர் உதவித்தொகை மற்றும் அனைவருக்கும் கலைஞர் காப்பீடு அட்டை பெற விண்ணப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. 5 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், நவ.29 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தை கள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயண பேரணி  நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ  கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான சட்டங்கள், குழந்தை திரு மணங்கள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

திருவாரூரில் இன்று  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், நவ.29 - திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம்  நவம்பர் 30 (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல்  1.35 மணி வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட ரங்கில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை. கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை. வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள், விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ள னர்.  மேற்படி கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள்  விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

லாரி மோதி ஒருவர் பலி: ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை

அரியலூர், நவ.29 - அரியலூர் அருகே லாரி மோதி ஓய்வுபெற்ற ஆசிரி யர் உயிரிழந்த வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அரியலூரை அடுத்த அமினாபாத் கிராமத்தைச் சேர்ந்த வர் பொன்னுசாமி (65). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர்,  கடந்த 13.6.2015 அன்று அரியலூரிலிருந்து தனது கிராமத் துக்கு ஒருவரது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாக னத்தின் பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாய மடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுந ரான கடலூர் மாவட்டம் சோழதரம் கிராமத்தைச் சேர்ந்த  ஆனந்தவேலை (37) கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை  விசாரித்து வந்த நீதிபதி கர்ணன், குற்றவாளி ஆனந்த வேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து  செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆனந்த வேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வானவில் போட்டியில் வென்ற  மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

புதுக்கோட்டை, நவ.29 - குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வானவில் போட்டியில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ் மற்றும்  புத்தகங்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ.14 முதல் நவ.20  வரை குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடித் தல் தொடர்பாக, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு வான வில் போட்டி தொடர்பாக ‘எனக்குள் ஒரு முதல்வர்’ என்ற  தலைப்பில் அஞ்சல் அட்டையில் எழுதுதல், ‘சிறந்த குழந்தைகளுக்கான விருதுகள்’ என்ற தலைப்பு மற்றும் ‘நான் என் அடையாளம்’ ஆகிய 3 தலைப்பு களில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவி களுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பாராட்டுச்  சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

இன்று மாற்றுத்திறனாளிகள்  சிறப்பு குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், நவ.29-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நவ.30 (வியாழக்கிழமை) மாலை 3.30  மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து  கொள்ள உள்ளனர். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பயன் பெறலாம்.

அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரிக்கை

அரியலூர், நவ.29- உணவு, மருந்து, வேளாண் இடுபொருள்கள் போன்ற  அத்தியாவசிய பொருள்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். பொதுவிநி யோக முறையை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். வனங்களை அழிக்கும் வனப்பாதுகாப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செய லர் த.தண்டபாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலர்  மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் தர்ம.விஜயகுமார், எச்எம்எஸ்  நிர்வாகி திருவள்ளுவர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ.29- சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க ஸ்ரீரங்கம் பகுதிக்குழு பேரவை கூட்டம்  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சாலையோர வியாபாரிகள் அனைவருக் கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். முறையான வங்கிக் கடன் வழங்க வேண்டும்.  வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும். நல வாரிய குளறுபடிகளை சீர்செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  பகுதியின் புதிய தலைவராக எஸ்.கோவிந்தன், செயலாளராக எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளராக எஸ்.செந்தில்குமார்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

விதை விற்பனை நிலையங்களில் விதிமீறல் 17 மெட்ரிக் டன் விதைகளை விற்க தடை விதிப்பு

தஞ்சாவூர், நவ.29 -  தனியார் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, விதைச் சட்ட விதிகளை மீறியதற்காக 17.26 மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தனர்.  தஞ்சாவூர் மாவட்டத் தில், விதை ஆய்வு குழுவி னர் பட்டுக்கோட்டை, திரு வோணம் வட்டாரங்கள் மற்றும் தஞ்சை கொடிமரத்துமூலை, திருக்கானூர் பட்டி, மேலஉளூர், தென்னம நாடு மற்றும் ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலை யங்களில் ஆய்வு நடத்தினர்.  இதில், விதைச் சட்ட விதிகளை மீறிய தனியார் விதை விற்பனை நிலையங்களில் ரூ.19 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 17.26 மெட்ரிக் டன் அளவில் நெல், உளுந்து, நிலக்கடலை, மக்காச்சோளம் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.  மாவட்ட விதை ஆய்வு  துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமையில், விதை ஆய்வாளர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.