districts

img

ஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள், ஆட்சியர்கள்

திருச்சிராப்பள்ளி, ஏப்.19-  2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்.19 (வெள்ளிக்கிழமை) அன்று  நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள், ஆட்சியர்கள்  மற்றும்  பொதுமக்கள் வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளம் வாக்குச்சாவடியில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வாக்க ளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி காலை  7  மணிக்கு, குடவாசல் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். திருவாரூர் ஒன்றியம், தண்டலை ஊராட்சி,  விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட  தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தி.சாருஸ்ரீ தனது வாக்கினை செலுத்தினார்.

புதுக்கோட்டை

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில், தனது சொந்த  ஊரான மறமடக்கியில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன், மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி  வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி னார். ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்தூர்  கிராமத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  திருநாவுக்கரசர், தனது வாக்கைச் செலுத்தினார்.  அவருடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பின ரும், திருநாவுக்கரசர் மகனுமான எஸ்.டி. ராமச்சந்திரன் வாக்குச் செலுத்தினார்.

தஞ்சாவூர்

இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளு மன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி, தனது சொந்த கிராமமான திருவையாறு அருகே  உள்ள தென்னங்குடியில் உள்ள வாக்குச்சாவடி யில் வாக்களித்தார். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி யில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தனது குடும்பத்தினருடன் வரிசை யில் நின்று வாக்களித்தார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹி ருல்லா காலை 8 மணியளவில் தனது வாக்கை செலுத்தினார்.

கரூர்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, விராலிமலை, மணப்பாறை, வேடசந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர்.  கரூர் மாவட்டத்தில் கடுமையான வெயிலை யும் பொருட்படுத்தாமல் வாக்குச் சாவடிகளில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு  செய்தனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி யில் உள்ள தனது சொந்த ஊரான திருமங்க லத்தில் இந்தியா கூட்டணியின் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி தனது வாக்கை பதிவு செய்தார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில், மாலை 5  மணி நிலவரப்படி, 71.97 சதவீத வாக்குகள் பதி வாகி உள்ளன. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்க வேல், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காளியப்ப னூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ஜமா லியா முஸ்லீம் உதவிப்பெறும் தொடக்கப் பள்ளி  வாக்குச்சாவடியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற  உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா.எம்.முருகன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் கே.என்.அருண்நேரு திருச்சி மாவட் டம் புள்ளம்பாடி ஒன்றியம் சிறுவயலூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்  நடத்தும் அலுவலருமான க.கற்பகம் ரோவர் பள்ளி வாக்குச்சாவடியிலும், சிபிஎம் பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், குரும்பலூர்  அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூர் -  சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ரோவர் மேல் நிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்கை செலுத்தினர்.

இனாத்துக்கான்பட்டியில் ஒருவரும்  வாக்களிக்கவில்லை

தஞ்சாவூர் அருகே இனாத்துக் கான்பட்டி கிராமத்தில் 150 வீடுகளில் ஏறத்தாழ 650 வாக்காளர்கள் உள்ள னர். இக்கிராமத்தைச் சுற்றி விமானப் படை தளம் அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றியிருந்த அப்பகுதி மக்களின் நிலமும் அரசால் 35 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டன. மேலும், அடிப்படை வசதிகள் நிறை வேற்றப்படாததால், கிராம மக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள வைத் தேர்தலில் வாக்களிக்க வர வில்லை. தகவலறிந்த தஞ்சாவூர் வருவாய்  கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்ட  அலுவலர்கள் இனாத்துக்கான்பட்டிக்குச்  சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட வில்லை.

ஆம்புலன்சில் வந்து வாக்களித்த ஆயர்

தஞ்சாவூர், ஏப்.19- தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயராக எம். தேவ தாஸ் ஆம்புரோஸ் அடிகளார் (77) 25 ஆண்டு களாகப் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு  பெற்றார். அருளானந்த நகரில் உள்ள ஓய்வு  இல்லத்தில் வசித்து வரும் அடிகளார், உடல்நலக் குறைவு காரணமாக இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜனநாயக கடமையை ஆற்று வதற்காக அடிகளார், ஆம்புலன்ஸ் வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கில்டு ஆப் சர்வீஸ் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்  சாவடிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார். பின்னர் சக்கர நாற்காலியில் அடிகளார் அமர்த்தப் பட்டு வாக்குப் பதிவு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வாக்களித்த அவர்,  பின்பு ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் தனியார்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.