districts

img

கும்பகோணம் மாஸ் கல்லூரி ஆண்டு விழா சு.கல்யாணசுந்தரம் எம்.பி., பங்கேற்பு

கும்பகோணம்,  மே 19-

   கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது.

   விழாவிற்கு கல்லூரிகளின் தாளாளர் விஜயகுமார் தலைமை ஏற்றார். செயலர் மாலினி விஜயகுமார் முன்னிலை வகித்தார். அறங்காவலர் விக்னேஷ் விஜயகுமார், சிந்துஜா விக்னேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  

   வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிசு வழங்கினார். விழாவில் மாஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் மா.ஜெயகுமாரி, மாஸ் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சு.கருணாநிதி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

  முன்னதாக கல்லூரி துணை முதல்வர் க.சரவணன் வரவேற்க, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் செயலாளர் பி.ஜெயக்குமார், சிகரம் இலக்கிய குழுமத்தின் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.