மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மூத்த தோழர் ஆர்.எஸ் (எ) ஆர்.சாமிநாதனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம் திருவிடைமருதூர் கிருஷ்ணாபுரத்தில் கிளைச் செயலாளர் சிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல், ஆனந்தன்,லதா, கே ரங்கசாமி, ஐயப்பன், எஸ்.தர்மையன், முருகன், பிரேம்நாத் உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.