districts

img

கும்பகோணம் தோழர் நாகராஜ் இல்ல திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகரக் குழு உறுப்பினர் நாகராஜன் மகனும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நகரக் குழு உறுப்பினர் சிவக்குமார் சகோதரருமான கார்த்திக், மூப்பக்கோயில் முருகன் மகள் சந்தியா ஆகியோர் திருமண விழா கும்பகோணம் கோவிந்தன் மஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. விழாவில் சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மூத்த தோழர் ராஜகோபாலன், நகரக் குழு உறுப்பினர் பார்த்தசாரதி, எல்ஐசி சேகர், மாமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.