districts

குருதிக் கொடையாளருக்கு பாராட்டு

திருவாரூர், ஜூன் 15-

     உலக இரத்த தான தினத்தையொட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குருதிக் கொடையா ளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டி சான்றி தழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி. ஜோசப்ராஜ் முன்னிலை வகித்தார். அதிக முறை ரத்த  தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு என 32 பேருக்கும், மாவட்ட முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குருதி கொடை யாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.