districts

img

காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, ஏப்.17 - இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில்  கைச் சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதா மயிலாடுதுறை மாவட்டம், மாத்தூர், திருச்சம்பள்ளி, கீழ்மாத்தூர், இளையாளூர், வடகரை, அரங்கக்குடி, அன்ன வாசல் பகுதிகளில் செவ்வாயன்று மாலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருடன் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா எம்.முரு கன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சித்திக், விஜயபாலன், திமுக  ஒன்றியச் செயலாளர்கள்,  மார்க்சிஸ்ட் கட்சியின் செம்ப னார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் மற்றும்  மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர்.  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு கிரா மங்களிலும் வாக்குச் சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.