districts

img

பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு உரிய நிவாரணம் கரூர் ஆட்சியர்

கரூர், ஜூன் 10-

     கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் மாவட்ட அளவிலான  விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு வின் இரண்டாம் காலாண்டு ஆய்வுக்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபு சங்கர் தலைமையில் வெள்ளியன்று (ஜூன் 9) நடைபெற்றது.

    கூட்டத்தில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் நிலு வையிலுள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக் கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

   இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் வருவாய்  கோட்டாட்சியர் ரூபினா, துணை காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன், அக்பர்கான், தனித்துணைஆட்சியர்(ச.பா.தி) சைபுதீன், அரசு சிறப்பு வழக்கறி ஞர்(எஸ்.சி மற்றும் எஸ்.டி) லட்சும ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.