districts

img

குறவர் சமூக மக்கள் மின்னணு குடும்ப அட்டை பெற ஆணை வழங்கல்

மயிலாடுதுறை, மே 21 - குறவர் மற்றும் உரிக்கார நாயக்கர் சமூக  மக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை பெறு வதற்கான ஆணை வழங்கப்பட்டது. தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 70 வரு வாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக்  கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களு டைய கோரிக்கை மனுக்களை பெறுதல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சி தரங்கம்பாடி  வட்டாட்சியர் அலுவலகத்தில் சீர்காழி வரு வாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமை யில் துவங்கி நடைபெற்று வருகிறது.  நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கூடலூர், ஈச்சங்குடி, நரசிங்க நத்தம், முத்தூர், அகதராதனூர், கடக்கம்,  அகரவல்லம், எடக்குடி கிளியனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து  மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆறுபாதி நடுக்கரை காவேரி கரை ஓரங்களில் வசித்து வரும் உரிக்கார நயக்கர் மற்றும் குறவர் சமூகத்தை  சேர்ந்த 6 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை  வழங்குவதற்காக வட்ட வழங்கல் அலுவலர் பாபு நேரில் சென்று கணக்கெடுப்பில் ஈடு பட்டார். இதையடுத்து பல ஆண்டுகளாக குடும்ப அட்டை இல்லாமல் சிரமத்திலிருந்த குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை நடை பெற்ற முகாமில் மின்னணு குடும்ப அட்டை கள் பெறுவதற்கான ஆணையை வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் வழங்கினார். தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சமூக  பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு,  திருவிளையாட்டம் சரக வருவாய் ஆய்வாளர்  கவிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

;