districts

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு

திருச்சிராப்பள்ளி, டிச.16 - அடுக்குமாடி குடியிருப்பில் ஏழை  மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு  செய்வதில் நிகழும் முறைகேடுகளை  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடியேறும் போராட்டம் நடத்த  உள்ளது. இதுகுறித்து கட்சியின் திருச்சி  மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு  கல்மந்தை பகுதியில் 1963 ஆம் ஆண்டு குடியிருந்த ஏழை- எளிய மக்களின் குடிசை வீடுகள் அடிக்கடி தீப்பிடித்து எரிந்தன. இதனால் அன்றைய அரசு 64 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி கொடுத்து குடியமர்த்தியது.  இந்நிலையில் கடந்த அதிமுக  ஆட்சிக் காலத்தில், 6 ஆண்டுகளுக்கு  முன்பு மேற்கண்ட 64 வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக அடுக்குமாடி  வீடு கட்டுவதாக கூறி, 64 வீடுகளை காலி செய்து தரக் கோரினர்.  இதனால் அப்பகுதி மக்கள் அந்த  வீடுகளையொட்டி குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான காலியி டத்தில், சுமார் 150-க்கும் மேற்பட்ட கெட்டி மெத்தை, ஓட்டுவில்லை, குடிசை வீடுகளில் சுமார் 55 ஆண்டு களுக்கு மேலாக 3 தலைமுறையாக குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவருமே தினக்கூலி ஏழை தொழிலாளர்கள். ரேசன் அட்டை, வாக்காளர், ஆதார் அட்டை, மின்சாரம்,  குடிநீர் இணைப்புகளை பெற்று வசித்து வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட 64 வீடுகளோடு சேர்த்து, இந்த 150 வீடு களையும் காலி செய்து தரக் கோரி னர். அதனடிப்படையில் அனைவருக் கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று  வீடுகளை காலி செய்து, அருகில் வாடகை வீடுகளில் வசித்து வரு கின்றனர் இம்மக்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக  கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், 192 குடியிருப்புகள் கடந்த  2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டன. இந்த வீடுகள், ஏற்க னவே குடிசை மாற்று வாரிய வீட்டில்  குடியிருந்த 64 பேரின் வாரிசுகளுக்கு  ஒதுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள் ளனர்.  மீதமுள்ள 150 குடியிருப்பு  வாசிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட வில்லை.  மேலும், 128 வீடுகளே கட்டப் பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை. கடந்த 2  மாதத்திற்கு முன்பு வீடுகளை ஒதுக்கீடு  செய்யக் கோரி நடத்திய குலுக்கல்  முறையில் 96 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. மீதமுள்ள 32 பேருக்கு பல கட்ட விசாரணை நடத்திய பிறகும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதனால் ஏழை,எளிய மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக வாடகை  வீட்டில் வசித்து வரும் ஏழை கூலித் தொழிலாளர்கள் நிலை குறித்து சிந்திக்காமல், மேற்கண்ட வீடுகளை அப்பகுதியில் உள்ள அரசியல் பிர முகர்கள் சிலர் லட்சக்கணக்கில் பணம்  பெற்றுக் கொண்டு, வசதியான வெளி யாட்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய பகிரங்கமாக முயற்சி செய்து  வருகின்றனர். இவர்களின் தவறான நடவடிக்கைக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சிலரும் துணை போவதாக தெரி கிறது. அரசு அதிகாரிகளின் இந்த  செயல் தமிழக அரசின் நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்திடும். எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குலுக்கல் முடிந்து டோக்கன் வழங்கப்பட்ட 96 பேருக்கும் உடனடியாக வீடுகளை ஒதுக்க உத்தரவிட வேண்டும். பல முறை ஆய்வு நடத்தி, அங்கு 3 தலை முறையாக குடியிருந்து வந்த மேலும்  32 பேருக்கு, உடனடியாக குடி யிருப்புகளை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.  மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, பொது மக்க ளோடு இணைந்து பாலக்கரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அலுவலகம் முன்பு திங்கட் கிழமை (டிச.18) குடியேறும் போராட் டத்தை நடத்த உள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.