மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தல் புதுக்கோட்டை, ஜன.27 - அரசுப் பள்ளிகளில் இடை நிற்றலை தடுப்பதற்கு பள்ளி களின் மேலாண்மைக் குழுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ,சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் களுக்கான மாநாடு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் ஆட்சியர் பேசு கையில், அரசு பொதுத்தேர்வு களில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப் படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனை வரும், பள்ளி தலைமையாசிரி யர்கள் மற்றும் ஆசிரியர் களுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை குறைக்கும் வகையில் குறிப்பிட்ட நாட் களுக்கு மேல் பள்ளிக்கு வருகை தராத மாணவ, மாண விகளின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியத்தை எடுத் துரைத்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து தொடர்ந்து கல்வி கற்க நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண் களுக்கு கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளின் பெற் றோர்களுக்கு எடுத்துரைத்து, மாணவிகள் தொடர்ந்து பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), செந்தில் (தொடக்கநிலை), உதவித் திட்ட அலுவலர்கள் சுசீந்திரன், கோ விந்தன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.