பெரம்பலூர், நவ.19 - 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ.17 அன்று பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க.பாண்டி யன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்தி ரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் 29,524 விவ சாயிகளுக்கு நவம்பர் 15 அன்று வரை ரூ.245.08 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண் டில் அக்டோபர் மாதம் வரை 41,405 விவ சாயிகளுக்கு ரூ.30.22 கோடி மதிப்புள்ள 12975.366 டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பயிர்க் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கியதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்தி லேயே முதலிடத்தில் உள்ளது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி அறி விப்பினை செயல்படுத்தும் விதமாக, சுய உதவிக் குழுக்களில் 25,971 உறுப்பி னர்களின் ரூ.52.72 கோடி அளவிலான கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது” என்றார். மாவட்ட அளவில் சிறப்பாக செயல் பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.