districts

உள்வாங்கிய கடல் கரை தட்டிய படகுகள்

தூத்து க்குடி, ஆக.16-

     தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ  கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாது காக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் சிறிய வகையான படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழில்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான புதன்கிழமை தூத்துக்குடி புதிய துறை முகம் சாலையில் உள்ள கடல் பகுதியானது உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 40-அடி தூரத்திற்கு  மேல் கரையில் இருந்து உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் மீனவர்கள் கடல் மேல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கரை தட்டி நின்றன.