districts

நிறைவடையாத மயான சாலைப் பணி: கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஏப்.2 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள கிள்ளியூர் ஊராட்சியில் மயானத்திற்கு  செல்லும் மண் சாலை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையையடுத்து புதி தாக கப்பி சாலையாக அமைக்க பணிகள் துவங்கின. பணிகள்  துவங்கி ஆறு மாதமாகியும், சாலை பணி நிறைவடையா மலேயே உள்ளது. இததைக் கண்டித்து கிராம மக்கள் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.                         கிள்ளியூர் ஊராட்சியில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் மயான சாலை ஆற்றங்கரையில் உள்ளது.  இந்த சாலையை சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளாக இச்சாலை மண் சாலையாகவே இருந்தது. மழைக்காலங்களில் இந்த வழி யாக இறந்தவர்களின் உடலை சுமந்து செல்ல மிகவும் சிரமப் பட்டனர். மயானத்திற்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தரக் கோரி நீண்ட காலமாக அந்தப்  பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்த நிலை யில், கடந்த 2021 அக்டோபர் மாதம் மண் சாலையை கப்பி  சாலையாக அமைத்தனர்.  சில நாட்களிலேயே தார்ச்சாலையாக மாற்றப்படும் என  மக்கள் நம்பி வந்த நிலையில், ஆறு மாதங்கள் கடந்த நிலை யிலும், கப்பி சாலை முழுமையாக போடப்படாததால் முழுமை பெறாத சாலை பணியை உடனடியாக நிறைவேற்றக் கோரி  கிள்ளயூர் கிராம மக்கள் மயான சாலையில் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

;