அறந்தாங்கி, டிச.11 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த செவிடங்காட்டில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கிளை துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் வெ.சரவணன், கிளை செய லாளர் கரு.சிவக்குமார் முன்னிலை வகித்தார். வாலிபர் சங்க மாநில தலைவர் என்.ரெஜிஸ் குமார் கொடியேற்றி விளக்க உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் டி.நாராயணன் தகவல் பலகையை திறந்து வைத்தார். கிளைத் தலைவராக வெ.சரவணன், செயலாளராக கரு.சிவக்குமார், கிளை பொருளாளராக கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர். சிபிஎம் ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேஷ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கர்ணா வாழ்த்தி பேசி னர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய வகையில் இருக்கும் பள்ளி சமையல் கூடம் மற்றும் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும். தார்ச்சாலையை கிராமப்புற போக்குவரத்து சாலை அளவில் மாற்றி சாலை யோரத்தின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும். செவி டன்காடு கிராமத்தில் தெற்கு குடியிருப்பில் குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.