districts

img

இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகங்கள் சீரமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

மயிலாடுதுறை, டிச.11 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டங்களிலுள்ள ஒட்டுமொத்த கிராம நிர்வாக அலுவலகங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அனைத்து கிராம நிர்வாக அலுவல கங்களையும் உரிய ஆய்வு செய்து சீர மைக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டத்தில் எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, பொறையார், திருக்க டையூர், டி.மணல்மேடு, நெடுவாசல், கூடலூர், காட்டுச்சேரி, தில்லையாடி, கீழையூர், சங்கரன்பந்தல், இலுப்பூர், திருவிளையாட்டம், கொத்தங்குடி, ஈச்சங்குடி, பெரம்பூர், சேத்தூர், செம்ப னார்கோவில், தலைச்சங்காடு, பரச லூர், மேமாத்தூர், கிடாரங்கொண் டான், அரசூர், நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் 64 கிராம நிர்வாக அலுவ லகங்கள் உள்ளன. சில இடங்களில் சமுதாய கூடங்களில் அலுவலகம் செயல் படுகிறது. அனைத்து கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற அலு வலக கட்டிடங்கள் இருந்தாலும், அவை  முற்றிலும் சேதமடைந்தும், மேற்கூரை கள் பெயர்ந்தும், சுவர்கள் விரிசல்  விட்டும் காணப்படுகிறது. மழைக்காலங் களில் பெரும்பாலான கிராம நிர்வாக  அலுவலர்கள் குடை பிடித்துக் கொண்டு அலுவலகத்தில் பணிபுரிகிற அவலநிலையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.  பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு கிராம நிர்வாக அலு வலரின் சான்று தேவைப்படும் நிலை யில், ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவ லகங்களுக்கும் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டோர் மற்றும் நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களில் நெல்  மூட்டைகளை விற்பனை செய்யும் காலங் களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சான்றுகள், சிட்டா, அடங்கல்  பெற வந்து செல்லும் நிலையில், கிராம  நிர்வாக அலுவலக கட்டிடங்களோ நிற்ப தற்குக் கூட தகுதியில்லாமல் உள்ளது.                                                      கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக  விஏஓ அலுவலகங்கள் சேதமடைந்து, பாழடைந்த நிலையில் இருப்பது குறித்து வட்டாட்சியர், மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட வருவாய்த்துறை உயர்  அதிகாரிகளுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகள் மனுக்கள் வாயிலாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் உத்திரங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் நவீத், விஏஓ அலுவலகங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, சேதமடைந்து மிகவும்  மோசமான நிலையிலுள்ள கட்டிடங் களை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சி யரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

;