districts

img

பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய இந்து அமைப்பின் நிர்வாகி கைது

தஞ்சாவூர், அக்.26 –  தஞ்சாவூரில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய, இந்து எழுச்சி பேரவை நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சாய்ரகு (வயது 39), இவர் இந்து எழுச்சி பேரவையில், தஞ்சாவூர் மாநகர மாவட்டத் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி இரவு, கட்சி அலுவலகத்தில், தனது பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது, கட்சி நிர்வாகிகள் வழங்கிய பட்டாக் கத்தி யால், கட்சி அலுவலகத்தின் வெளியே சாலையில் வைத்து கேக்கை வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.  இந்த பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியானது.  இதன் அடிப்படையில், தஞ்சாவூர் தாலுகா காவல் துறையினர், சாய்ரகு மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, புதன்கிழமை இரவு கைது செய்தனர்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.