districts

img

‘ஐயா ஒரு நிமிடம்...’

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் இந்தி யா கூட்டணியில் திமுக தலை மையிலான கூட்டணியில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திகிராமம் ஊராட்சி சாமியார்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அண்ணா நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு சாமியார்பட்டிக்கு வந்த போது, மூன்று சக்கரம் மோட் டார் சைக்கிளில் வந்த மாற்றுத் திறனாளி விஜயலட்சுமி, அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து, ஐயா ஒரு நிமிடம் என அழைத்தார்.  உடனே அவரிடம் வேட்பா ளர் ஆர்.சச்சிதானந்தத்துடன் சென்ற அமைச்சர் ஐ.பெரிய சாமியிடம், ‘‘ஐயா உங்களால் தான் நான் இன்று வெளியே நடமாட முடிகிறது. நீங்கள் கொடுத்த மூன்று சக்கரத்து டன் கூடிய பேட்டரி வாகனம் (சைக்கிள்) என்னை புதிய உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது. வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த நான் உங்கள் உதவியால் அனை வரையும் வெளியே வந்து பார்க்க முடிகிறது. எனது பெற் றோருக்கும் மகிழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. அப்பா மாதிரி நீங்கள் எனக்கு செய்த உத வியை மறக்க மாட்டேன்’’ என்றார்.  அவரிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி, ‘‘இப்போது என்னிடம் வாக்குச் சேகரிக்க வந்திருக்கும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்க ளுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங் களை போன்ற பலருக்கும் உத விகள் செய்ய முடியும். எம்.பி. நிதியில் மாற்றுத்திறனாளி களுக்கு அதிக ஒதுக்கீடு செய்ய முடியும்’’ என்று நெகிழ்ந்தார்.  இப்பிரச்சாரத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடரா ஜன், தண்டபாணி, திமுக நிர்வாகி அம்பைரவி, தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கள் கட்சி செயலாளர்கள் தமிழ ரசன், மைதீன்பாவா, சிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன், திண்டுக் கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ப.ராஜேஸ் பெருமாள், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜ், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சூசைமேரி, சிஐடியு கன்வீனர் விகே.முருகன், தொழிற்சங்கத்தை சேர்ந்த பால்ராஜ், மாவட்டத் தலைவர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆத்தூர் தொகுதி செயலாளர் ஆ.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர் அரசு, அகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் நந்தகோபால், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம் பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள் பிள்ளையார்நத்தம் உலகநாதன், தொப்பம்பட்டி கருப்பையா, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலை வர் ஏ.சிவக்குமார், துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், எம்.சிபாண்டியன், வசந்தா  கென்னடி, பொருளாளர் கருப் பையா, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதி நிதி ஆரியநல்லூர் தங்கவேல், ஒன்றிய பிரதிநிதி வடக்குத் தெரு சந்திரன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

;