நாகர்கோவில், ஏப்.19- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 வெள்ளியன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகல் 3 மணி வரை மலைப்பகுதி களில் சற்று அதிகமாகவும், கடற்கரை பகுதிகளில் குறைவாகவும் வாக்கு பதிவாகி இருந்தது. குமரி மாவட்டத்தில் மக்கள வைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் வெள்ளியன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத் தில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7,78,834 பெண்கள், 135 மூன்றாம் பாலி னத்தவர் என மொத்தம் 15,55,096 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக் காக 1698 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கன்னியா குமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளராக விஜய் வசந்த், அதிமுக சார்பில் பசிலி யான் நசரேத், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 22 வேட்பா ளர்கள் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி விஜிதா ஸ்ரீதர் ஆகியோர் நாகர் கோவில் குருசடி பள்ளி யில் வாக்களித்தனர். இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியி டும் காங்கிரஸ் வேட்பா ளர் விஜய் வசந்த் அகஸ்தீஸ்வ ரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். கன்னியாகுமரி, நாகர்கோவில், கிள்ளியூர், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடைபெற்றது. காலை யிலேயே வாக்களிக்க ஏராளமான பெண்களும் ஆண்களும் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தனர். முதியவர் கள், இளம் முதல் முறை வாக்கா ளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் என ஏராள மானோர் காலையிலே ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்தனர்.
பழங்குடியினர் படகில் வந்து வாக்களிப்பு
பேச்சிப்பாறை அணையை சுற்றி லும் தச்சமலை, களப்பாறை, முட வன்பொற்றை, தோட்டமலை, எட்டாங் குன்று, மாறாமலை போன்ற மலை வாழ் மக்கள் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பொது மக்கள் அன்றாட தேவைக்கு பேச்சிப் பாறை அணை யில் படகு மூலம் பயணித்து பேச்சிப்பாறை பகுதிக்கு வந்து செல்வது வழக் கம். அவர்கள் வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அரசு பழங்கு டியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலரும் காலை முதலே படகு மூலம் அணையை கடந்து வந்து, பின்னர் ஒரு கிலோமீட்டர் நடந்தும் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராள மான இளம் வாக்காளர்கள் வெளி மாநிலங்களில் படித்தும், வேலை பார்த்தும் வருகிறார்கள். அவர்களும் வாக்களிப்பதற்கு ஊருக்கு வந்தி ருந்தனர். அனைத்து வாக்குச்சாவடி களிலும் பலத்த காவல்துறை பாது காப்பு போடப்பட்டிருந்தது. 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டி ருந்தது. அங்கு துப்பாக்கி ஏந்திய காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த னர். வெப்கேமிராக்கள் பொருத்தப்பட்டு நாகர் கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த வாக்குச்சாவடிகள் கண்கா ணிக்கப்பட்டன.
மின்னணு இயந்திரங்கள் பழுது
மாவட்டத்திலுள்ள பல வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கி யது. நாகர்கோவில் எஸ்.எல்பி உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் வெகு நேரம் காத்து நின்றனர். நாகர்கோவில் வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. அதிகாரிகள் பழுது நிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பொது மக்கள் வெயிலையும் பொருட்படுத்தா மல் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பூதப்பாண்டியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்ட வாக்குச்சாவடியிலும், தெரிசனம்கோப்பு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பட வில்லை. இந்த வாக்குச்சாவடி களுக்கு மாற்று இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. பின்பு அந்த வாக்குச் சாவடிகளில் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொ டங்கியது. குளச்சல் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட நெய்யூர் பேரூராட்சி எட்டாவது வார்டு பகுதியில் சேனம் விளை அரசு நடுநிலைப்பள்ளியில் காலை 5:30 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று இயந்திரம் 6:30 மணி அளவில் கொண்டுவரப்பட் டது. கொண்டுவந்த மாற்று இயந்திர மும் செயல்படவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க முடியவில்லை. வெகு நேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்காததினால் வாக் காளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஒரு பட்டனை அழுத்தினால் 3 பகுதியில் எரிந்த விளக்கு பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட் பட்ட காட்டாதுரை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி யில் சுமார் 30 நிமிடங்கள் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் கோளாறு ஏற்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நித்திரவிளை அருகே மீனவ மக்கள் வாக்களிக்க பயஸ் லெவன்த் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந் தது. இந்த வாக்குச்சாவடியில் 112 ஓட்டுகள் பதிவான நிலையில் சுமார் 8:30 மணி அளவில் ஒரு பட்டனை அழுத்தினால் வேட்பாளர் வரிசையில் மூன்று பகுதிகளில் விளக்கு எரிந்தது. பின்னர் மாற்று இயந்திரம் பொருத்தி 10:20 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது.
டிஐஜி ஆய்வு
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணி யில் 3,500 காவலர்கள் ஈடுபட்டிருந்த னர். மாவட்டம் முழுவதும் வியாழக் கிழமை இரவில் இருந்தே தீவிர வாகன சோதனை நடைபெற்றது. வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணித்தனர். கடலோரப் பகுதி களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திற் கும் அந்தந்த காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனி சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் காவல் கண்கா ணிப்பாளர் சுந்தரவதனம் தலைமை யில் அதிரடிப்படையினர் ரோந்து சென்றனர். நெல்லை சரக டிஐஜி பிர வேஷ்குமார் குமரி மாவட்டத்தில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டார். வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று அவர் ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் மிகவும் அமைதி யான முறையில் வாக்குப்பதிவு நடை பெற்றதாக காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். வாக்குப்பதிவு 3 மணி நிலவரம் குமரி மாவட்டத்தில் மதியம் மூன்று மணி நிலவரப்படி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 48.32 சத வீத வாக்குப்பதிவானது. சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி 149509 வாக்குகள் 50.52 சதவீதம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 125818 வாக்குகள் 47.31 சத வீதம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி 126576 வாக்குகள் 52.33 சத வீதம், குளச்சல் சட்டமன்ற தொகுதி 128829 வாக்குகள் 47.78 சதவீதம், கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதி 114145 வாக்கு கள் 46.24 சதவீதம், விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி 107854 வாக்குகள் 45.36 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கடற்கரை பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்த அதே நேரம் கடற்கரை பகுதி களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மணவாளக்குறிச்சியில் பிற்பகல் 2 மணி வரை பாபுஜி நினைவு மேல் நிலைப்பள்ளியில் கரைப்பகுதி மக்க ளுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் (149) மொத்தம் உள்ள 1107 வாக்குகளில் 805 வாக்குகள் பதி வாகி இருந்தன. இது 72.7 சதவிகித மாகும். அதே நேரத்தில் கடற்கரை பகுதி மக்களுக்காக வின்சென்ட் பவுல் ஆரம்ப பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் (153) மொத்தமுள்ள 1088 வாக்குளில் 559 வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 51.3 சதவிகிதம் ஆகும். இது போல் அதே பள்ளியில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் (154) மொத்த வாக்குகள் 710 இதில் 380 மட்டுமே பதிவாகி இருந்தன. இது 53.2 சதவிகிதமாகும். இதுகுறித்து கேட்ட போது மீனவர் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பலரும் கேரளத்தில் தங்கி மீன் பிடித்தலில் ஈடுபட்டுள்ள தாக தெரிவித்தனர். எனினும் மாலை வேளையில் கடற்கரை பகுதிகளில் இருந்து பெண்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர்.
குமரியில் 5 மணி நிலவரப்படி 58.80 சதவீதம் வாக்குப்பதிவு
5 மணி நிலவரப்படி கன்னி யாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 916124 (58.80 சதவீதம்) வாக்குகள் பதிவானது. சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 184 564 வாக்குகள் 62.37 சதவீதம், நாகர் கோவில் சட்டமன்ற தொகுதி 146520 வாக்குகள் 55.10 சதவீதம், பத்மநாப புரம் சட்டமன்ற தொகுதி 148559 வாக்குகள் 61.41 சதவீதம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி 142855 வாக்குகள் 57.87 சதவீதம், குளச்சல் சட்டமன்ற தொகுதி 159070 வாக்குகள் 59 சத வீதம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 134556 வாக்குகள் 56.60 சதவீதம்.