districts

img

ஹீல்டு டிரஸ்ட் நடத்திய வெப்ப அலை விழிப்புணர்வு, தடுப்பு முகாம்

அறந்தாங்கி, மே 12-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேல்மங்களம் பகுதியில் உள்ள ஹீல்டு டிரஸ்ட் சார்பாக வெப்ப அலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முகாம் நடைபெற்றது. அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில், அறந்தாங்கி வட்டாட்சியர் திரு நாவுக்கரசு மற்றும் ஆவுடையார்கோவில் வட்டாட் சியர் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெப்ப அலை குறித்த  விழிப்புணர்வும், பொதுமக்க ளுக்கு தர்பூசணி, ஐஸ் மோர், சர்பத் மற்றும் குளிர்பான நுங்கு களை ஹீல்டு டிரஸ்ட் இயக்கு நர் திவ்யா வழங்கினார். வணிகர் சங்க பேரமைப்பு புதுக்கோட்டை மாவட்டத் தலை வர் வரதராஜன், அறந்தை பிர ண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டய தலைவர் தங்கதுரை,  மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர்  பழனி தேவா மற்றும் அறந்தாங்கி திமுக தகவல்  தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர்  செந்தில்வேலன், பெருங்காடு சுப்ரமணியன், மேல் மங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா தேவி  ரவிச்சந்திரன் மற்றும் மேலப்பட்டு ஊராட்சி மன்ற  தலைவர் அயூப்கான், ஹீல்டு அறக்கட்டளை நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.