மயிலாடுதுறை, செப்.8 - மயிலாடுதுறை மாவட்டம், காட்டுச் சேரி அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் திருக்களாச்சேரி ஹமீதியா அரசு உதவி பெறும் பள்ளி சாதனை படைத்துள்ளது. போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 600 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் திருக்களாச்சேரி ஹமீதியா அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பு நிலையை பெற்றுள்ளனர். 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான போட்டி யில் இப்பள்ளி 86 புள்ளிகள் பெற்று, தரங்கம்பாடி வட்ட அளவில் முதலி டம் பெற்று, சிறந்த பள்ளிக்கான கோப் பையை வென்றுள்ளது. 17 வயதுக் குட்பட்டோருக்கான மாணவர்கள் பிரிவில், பிளஸ் 2 மாணவர் செழியன் 100, 200 மீட்டர் நீளம் தாண்டுதல் போட்டி யில் முதலிடம் பெற்று தனிநபருக்கான சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பள்ளியில் வெள்ளியன்று நடை பெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற் றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சுதாகர், விஸ்வநாதன் ஆகியோரையும் பள்ளி செயலாளர் ராஜ், தலைமை ஆசிரியர் பாலாஜிகுமார், உதவி தலைமை ஆசிரியர் சேதுராமலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.