பாபநாசம், நவ.22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ளது கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடக் கரையோரம் உள்ளன. இந்த ஊர்களை இணைக்கிற சாலை 5 கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பய னற்ற நிலையில் உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி வரும் சாலையை தரமான தாக அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், இந்தச் சாலை போடப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகிறது. பரா மரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட வில்லை. இதன் வழியே நிறைய வாக னங்கள் சென்று வருகின்றன. வயதான வர்கள் இச்சாலையில் நடந்து செல்வது சிரமம். இப்பகுதியில் இயங்கி வரும் செங்கல் சூளைகளும் போக்கு வரத்திற்கு இந்தச் சாலையைத்தான் பயன்படுத்துகின்றன. மழை நாட்களில் இச்சாலையில் மண் அரிப்பு ஏற்படு கிறது. இனியும் இந்த சாலையை கவனிக் காமல் விட்டால் சாலை இருந்ததற்கான அடையாளமே இருக்காது. எனவே புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை தரமாக போடப்பட வேண்டும். புத்தூரில் ரேசன் கடை, சமுதாய கூட கட்டிடங்கள் பழுத டைந்த நிலையில் உள்ளன. அதையும் புதிதாக கட்டித் தர வேண்டும்” என்றனர்.