districts

img

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்ட விளக்கப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, நவ,23- 27 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற நவம்பர் 26, 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை யில் உள்ள ஆளுநர்  மாளிகை முன் போராட்டம் நடத்த அனைத்து தொழிற் சங்கங்கள் முடிவு செய் துள்ளன. இதனை விளக்கி அனை த்து சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்  ஸ்ரீரங்கத்தில் தொடங்கிய பிரச்சாரம் சிந்தாமணி அண்ணா சிலை, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். இதில் எல்.பி. எஃப். ஜோசப் நெல்சன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், ஐ.என்.டி.யூ.சி. வெங்கட் நாராயணன், ஏ.ஐ.சி.சி.டி.யு ஞான தேசி கன், ஐக்கிய விவசாயி கள் முன்னணி ஒருங்கி ணைப்பாளர் அயிலை.சிவ சூரியன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட தலைவர் சீனி வாசன், ஒருங்கிணைப்பாளர் ரகுபதி,சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.