திருவனந்தபுரம், ஜன.16- சில்வர் லைன் ரயிலுக்கான விரி வான திட்ட அறிக்கையை (டிபிஆர்) கேரள அரசு வெளியிட்டுள்ளது. இது சட்டப்பேரவை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 3773 பக்கங் கள் கொண்ட விரிவான திட்ட அறிக்கை யின்படி இந்த திட்டப்பணிகள் 2025 -2026 இல் நிறைவடையும். ஒரு ரயிலில் ஒன்பது பெட்டிகள் இடம்பெறும். ஒரே நேரத்தில் 675 பேர் பயணிக்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. கேரள அரசின் பொதுத்துறை நிறு வனம் கே ரயில். இதில் இந்திய ரயில்வேயின் பங்களிப்பும் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் திருவனந்த புரத்திலிருந்து காசர்கோடு வரையி லான 530 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் சென்றடையும் திட்டம் சில் வர் லைன். கேரளத்தின் போக்கு வரத்துக்கு மட்டுமல்லாது தொழில் வளர்ச்சிக்கும் இத்திட்டம் பேருதவி யாக அமையும் என அரசு தெரிவித்துள் ளது. ஆனால் எதிர் கட்சிகள் இத்திட்டத் துக்கு எதிரான பிரச்சாரத்தை வலது சாரி ஊடக உதவியுடன் வலுவாக நடத்தி வருகின்றன. நில மதிப்பில் இரட்டிப்பு தொகை இழப்பீடாக வழங்குவதுடன் வீடுகளை இழப்போர் விரும்பினால் மாற்று வீடு அல்லது கூடுதல் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஆறு பிரிவு களைக் கொண்டுள்ளது:
போக்கு வரத்து ஆய்வு, புவியியல் ஆய்வு அறிக்கை மற்றும் நிலப்பரப்பு ஆய்வு, திட்டத்திற்காக இடிக்கப்படும் கட்டி டங்களின் விவரங்கள் மற்றும் படங் கள் அந்த அறிக்கையில் உள்ளன. திட்டப் பகுதியின் தாவரங்கள் பற்றிய ஆய்வு மற்றும் அறிக்கையை டிபிஆர் உள்ளடக்கி உள்ளது. டிபிஆர் மற் றும் சாத்தியக்கூறு அறிக்கையை கேரள ரயில் மேம்பாட்டுக் கழகம் லிமி டெட் நிறுவனமான சிஸ்ட்ரா தயா ரித்துள்ளது. திட்டத்தின் பெயர் திரு வனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான அரை அதிவேக பாதை என்பதாகும். மக்கள் தொகையுடன் ஒப்பி டும்போது கேரளாவில் தற்போதுள்ள ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அமைப்பு போதுமானதாக இல்லை என்று அறிக்கை கூறுகிறது. அண்டை மாநிலங்களை விட கேரளாவில் பயண வேகம் 30 முதல் 40 சதவிகிதம் குறை வாக உள்ளதாகவும், எனவே இது போன்ற திட்டம் தேவைப்படுவதாக வும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின்படி, திட்டத்திற்கு 1226.45 ஹெக்டேர் நிலம் தேவை. இதில், 1074.19 ஹெக்டேர் தனி நபர்களி டமிருந்தும், 107.98 ஹெக்டேர் அரசிடமி ருந்தும், 44.28 ஹெக்டேர் இந்திய ரயில்வேயிடமிருந்தும் கிடைக்கும்.