districts

img

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்ட குக்கிராமங்களை இணைக்கும் அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது

மயிலாடுதுறை, ஜன.21 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகிலுள்ள திருவிடைக்கழியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப் பட்ட தடம் எண்.31 அரசுப் பேருந்து சேவையை மீண்டும் துவக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது.  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கொடியசைத்து சேவையை துவக்கி வைத்து திருவி டைக்கழியிலிருந்து பெருங்குடி, கொங்க ராயன்மண்டபம், ஓலக்குடி, உத்தி ரங்குடி வழியாக இலுப்பூர் சங்கரன்பந் தல் வரை பேருந்தை ஓட்டிச் சென்றார்.  திமுக மாவட்ட துணைச் செயலாளர் மு.ஞானவேலன், திமுக ஒன்றிய செய லாளர் அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்த லைவர் நந்தினி ஸ்ரீதர், அரசுப் போக்குவ ரத்து கழகத்தின்  பணிமனை கிளை மேலா ளர்கள் ராமமூர்த்தி (மயிலாடுதுறை), ஜெயக்குமார் (பொறையார்), நாகை பொது மேலாளர் மகேந்திரகுமார், துணை  வணிக மேலாளர் சிதம்பரகுமார் மற்றும்  திருவிடைக்கழி ஊராட்சித் தலைவர் சங்கீதா ராஜா, உத்திரங்குடி ஊராட்சி  தலைவர் லெனின் மேஷாக் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையிலிருந்து (அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து) புறப்ப டும் தடம் எண் 31 என்ற அரசு பேருந்து  மயிலாடுதுறை, பெருஞ்சேரி, கிளிய னூர், கடக்கம், பெரம்பூர், சங்கரன்பந்தல், சேந்தமங்கலம் வழி யாக திருவிடைக்கழி வரை இயங்கி வந்தது.

போக்குவரத்து வசதியே இல்லாத  குக்கிராமங்கள் வழியாக சென்று வந்த இப்பேருந்து, கடந்த 2018 இல்,  அதிமுக ஆட்சியில் ‘வருவாய் இல்லை’  என காரணம் காட்டி திடீரென நிறுத்தப் பட்டது.  இதனால் அப்பேருந்தில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் எந்தவித நடவடிக்கை யும் இல்லாத நிலையில், கடந்த டிச.18  அன்று பெரம்பூர் கடைவீதியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் கே. விஜய ராகவன் தலைமையில் சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது.  போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு  வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரி தரன், மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ராமமூர்த்தி மற்றும் பெரம்பூர் காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்தப்பட்ட பேருந்தை தொடர்ந்து இயக்குவதாக எழுத்துப்பூர்வமாக  உறுதி அளித்தி ருந்தனர். இந்நிலையில் மீண்டும் மக்கள் சேவையாற்ற வந்த பேருந்தை, ஒவ்வொரு கிராமங்களிலும் பொது மக்கள் கையசைத்து வரவேற்றனர். மகளிர் கட்டணமின்றி இப்பேருந்தில் பய ணம் செய்யலாம் என்பது குறிப்பிடத் தக்கது.

;