districts

img

சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு மாநாடு

திருச்சிராப்பள்ளி, செப்.26- சிறுபான்மை மற்றும் சிறு பான்மையல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின்  உரிமை மீட்பு மாநாடு திருச்சி ராப்பள்ளி ஜோசப் கல்லூரி யில் வியாழனன்று நடந் தது. மாநாட்டிற்கு திண்டுக் கல் மறைமாவட்ட ஆயர்  தாமஸ்பால்சாமி, தென்னிந் திய திருச்சபை மதுரை,  இராமநாதபுரம் மண்டல பேராயர் ஜெயசிங் பிரின்ஸ்  பிரபாகரன், இந்து பள்ளி  நிர்வாகிகள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  சென்னை உயர்நீதிமன்ற நீதி யரசர் அரிபரந்தாமன் துவக்க வுரையாற்றினார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி,  பாபநாசம் சட்டமன்ற உறுப்  பினர் ஜவாஹிருல்லா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  மாநாட்டில் அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு தமிழக  அரசு அறிவித்து செயல்  படுத்தி வரும் மருத்துவம்,  பொறியியல், தொழில்நுட் பம் உள்ளிட்ட உயர் கல்வி யில் வழங்கப்படும் 7.5சதவீத இடஓதுக்கீடு, புதுமைப் பெண் திட்டத்தில் வழங்கப் படும் ரூ 1,000, உயர்கல்வி  ஊக்கத்தொகை, காலை  உணவுத் திட்டம், கலை இலக்  கியப் போட்டிகளில் வாய்ப்பு,  கட்டணமில்லா ஆங்கில வழிக்  கல்வி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயி லும் மாணவர்களுக்கு வழங்  கும் கட்டணச்சலுகை போன்ற மாணவர் நலன் சார்ந்த திட் டங்களை இந்த மாநாடு வர வேற்கிறது. இந்தத் திட்டங் கள் அனைத்தையும் அரசு  உதவி பெறும் பள்ளி மாண வர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்  ணிக்கைக்கு ஏற்ப விதி களுக்கு உட்பட்டு அரசு அனு மதித்த பணி நிறைவு, பதவி  உயர்வு, பணித்துறப்பு உள்  ளிட்ட காலிப்பணியிடங்க ளைத் தடையுமின்றி நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அனு மதிப்பதோடு, சிறுபான்மை பள்ளிகளில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் பெற்று  ஊதியமின்றி பணிபுரியும்  அனைத்து நிலை ஆசிரி யர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதி யம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அரசு உதவி பெறும் பள்  ளிகள் சார்பான மேல்றை யீட்டுத் தொகுப்பு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை அமர்வு கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் மீது தமிழ்நாடுஅரசு உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள  மேல் முறையீட்டைத் திரும் பப் பெறவேண்டும். அந்தத் தீர்ப்பைமுழுமையாக ஏற்று  செயல்படுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி யுள்ள உரிமைகளுக்கு எதி ராக தமிழ்நாடு தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம்  2018-மற்றும் விதிமுறை கள் 2023-இல் நிறைவேற் றப்பட்டுள்ள புதிய விதி களை தமிழகஅரசு சிறப்பு ஆணை பிறப்பித்து நீக்கத்  தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அரசு உதவி பெறும் தனியார்பள்ளி ஆசி ரியர் அலுவலர் கூட்டமைப்பு  மாநிலப் பொதுச்செயலாளர் கனகராஜ் வரவேற்றார். முடி வில் டிஎன்ஏஎஸ்டிஎப் திரு நெல்வேலி மாவட்டத் தலை வர் பால்கதிரவன் நன்றி கூறி னார்.