districts

img

தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரத்தை உடனே வழங்குக! கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.6- தமிழக அரசு அறிவித்துள்ளபடி நல வாரியங்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்  காணிப்பு குழுக்களை அமைக்க வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட கட்டுமானத் தொழி லாளர் சங்கம் சார்பில் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.எஸ்.சேது தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், கட்டுமான சங்க  மாவட்டச் செயலாளர் சந்திரசேக ரன், மாவட்டப் பொருளாளர் உலக நாதன் ஆகியோர் விளக்கிப் பேசி னர். இதில் நிர்வாகிகள் வெள்ளைச்  சாமி, கல்யாணி, முருகன், வெங் கடேஸ்வரன், குணசேகரன் உள் பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ளபடி நல வாரியங்க ளில் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்  களை அமைக்க வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களுக்கு தீபா வளி போனஸ் ரூ.5 ஆயிரத்தை பண்டிகைக்கு முன்பாக அர சாணை வெளியிட்டு அமலாக்க வேண்டும். கட்டுமான பெண் தொழி லாளருக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். திருச்சி தொழி லாளர்கள் நல அலுவலகத்தில் ஓராண்டு காலமாக காலியாக உள்ள ஏசிஎல், டிசிஎல், ஜேசிஎல் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்  கைகள் வலியுறுத்தப்பட்டன.
பெரம்பலூர்
பெரம்பலூர் பழைய பேருந்து  நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆறு முகம் தலைமை வகித்தார். மாவட்  டத் தலைவர் அழகர், பொருளா ளர் அரவிந்த்குமார், நிர்வாகிகள் கருப்பையா, நடராஜ், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  சிஐடியு மாவட்டத் தலைவர்  எஸ்.அகஸ்டின், செயலாளர் அ. ரெங்கநாதன், துணைத்தலைவர் எஸ்.சிவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். என்.நடராஜ் நன்றி கூறினார்.

;